விளாடிமிர் புதின் மற்றும் வாங் யீ பேச்சுவார்த்தை
2023-09-21 14:44:23

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் செப்டம்பர் 20ஆம் நாள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான வாங் யீயைச் சந்தித்துப் பேசினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவை ரஷியா வெகுவாகப் பாராட்டி ஆக்கப்பூர்வமாக ஆதரிக்கிறது என்றும் இந்த முன்மொழிவைப் பழிவாங்கும் கூற்றுகளை எதிர்க்கின்றது என்றும் புதின் கூறினார். யூரேசிய பொருளாதார ஒன்றியம் திட்டத்தை இந்த முன்மொழிவுடன் இணைக்க வலுப்படுத்துவதன் மூலம், பிரதேச ஒருமைப்பாட்டை முன்னேற்ற ரஷிய விரும்புவதாக புதின் மேலும் தெரிவித்தார்.

பலதரப்பு நெடுநோக்கு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பேணிக்காத்து, சர்வதேச ஒழுங்கை நியாயமான திசை நோக்கி, வளர செய்யும் வகையில், புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாங் யீ ஆலோசனை தெரிவித்தார்.

தவிரவும், தற்போதைய சர்வதேச மற்றும் பிரதேசங்களின் நிலைமை குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். உக்ரைன் பிரச்சினையில், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க ரஷியா விரும்புவதாக புதின் மீண்டும் வலியுறுத்தினார்.