தூதரக மோதல் பின்னணியில் கனடாவிலுள்ள குடிமக்களுக்கு இந்தியாவின் ஆலோசனை
2023-09-21 15:01:32

கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள், இந்தியர்களுக்கு எதிராக பகைமை உண்டாக்கும் பகுதிகளுக்கு பயணம் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்று இந்திய அரசு புதன்கிழமை அறிவுறுத்தியது.   

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதையும், அரசியல் ரீதியாக மன்னிக்கப்பட்ட வெறுப்புக் குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகளையும் கருத்தில் கொண்டு, அங்குள்ள அனைத்து இந்திய குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, அந்நாட்டிலுள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.