“உலகளாவிய தெற்கு” என்பதில் சீனா எப்போதும் உள்ளது
2023-09-21 16:43:08

நியூயார்க்கில் நடைபெற்றுள்ள ஐ.நா.பொது பேரவையின் 78ஆவது கூட்டத்தொடரில், உலகளாவிய தெற்கு மீதான கவனம் குறித்து, முக்கிய பிரச்சினையாக விவாதிக்கப்பட்டது. உலகில் மிக பெரிய வளரும் நாடான சீனா, ஐ.நா. பொது பேரவையின் கூட்டத்தொடரில் உலகளாவிய தெற்கிற்குச் சொந்தமான நாடுகளின் வேண்டுகோள் மற்றும் நிலைப்பாட்டை சீனத் தரப்பு தெரிவித்தது.

புதிதாக வளர்ந்து வரும் பொருளாதாரப் பிரதேசங்கள் மற்றும் வளரும் நாடுகளை, "உலகளாவிய தெற்கு" என்பது குறிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், "உலகளாவிய தெற்கு" என்ற சொல், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் தலைமையில் நடைபெறும் கூட்டங்களிலும் பொது அறிக்கைகளிலும் அடிக்கடி குறிப்பிடப்பட்டு வருகின்றது. சர்வதேச அரசியல் துறையில், இது சூடான வார்த்தைகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது.

வளர்ச்சி அடைந்த நாடுகளின் நலன்கள் மற்றும் முன்னணி நிலையைப் பேணிக்காக்கும் விதம், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள், "உலகளாவிய தெற்கு" என்பதிலிருந்து சீனாவைத் தவிர்த்து, சீனாவின் வளரும் நாடு தகுநிலையை நீக்கி, வளரும் நாடுகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயன்று வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற 77 நாடுகள் குழு மற்றும் சீனா உச்சி மாநாட்டில், ஹவானா அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சீனா முன்வைத்த பல கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் இவ்வறிக்கையில் சேர்க்கப்பட்டன. உலகளாவிய வளர்ச்சி, ஒத்துழைப்புக்கான கூட்டு வெற்றி ஆகியவற்றை நனவாக்க தொடர்புடைய பல்வேறு தரப்புகள் பாடுபட வேண்டும் என்று இவ்வறிக்கையில் ஆலோசனையாக  தெரிவிக்கப்பட்டன. இது, உலகளாவிய தெற்கு நாடுகளால் வெளிகாட்டப்பட்ட ஒற்றுமை மற்றும் சுய நம்பிக்கையின் சமிக்ஞையாகும்.

சீனாவும் மற்ற வளரும் நாடுகளும் அதே வரலாற்று அனுபவங்களையும் போராட்ட போக்கையும் கொண்டுள்ளன. பொதுவான வளர்ச்சி சவால்கள் மற்றும் கடப்பாடுகளை எதிர்கொண்டு, தற்போதைய சர்வதேச ஒழுங்கு மற்றும் உலகளாவிய ஆட்சிமுறைக்கு ஒத்த கருத்துகள் மற்றும் வேண்டுகோள்களைக் முன்வைக்கின்றன. மேலும், வளரும் நாடுகளின் வளர்ச்சி பாதையில் ஒன்றாக, சீனா இயன்றளவில் ஆதரவு மற்றும் உதவியை வழங்கி வருகின்றது.

உலகளாவிய தெற்கு என்பதன் செல்வாக்கு இடைவிடாமல் வலுவடைந்து, உலகளாவிய ஆட்சிமுறைக்கு புதிய மாற்றம் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.