அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இலங்கை சேர்தல்
2023-09-21 11:44:38

இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி 19ஆம் நாள் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில்(TPNW), இணைவதற்கான ஆவணத்தை சமார்பித்ததையடுத்து, இவ்வொப்பந்தத்தில் சேர்ந்த 69ஆவது நாடாக இலங்கை மாறியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் 20ஆம் நாள் தெரிவித்தது.  

நியூயார்கில் ஐ.நா பொது பேரவையின் 78ஆவது அமர்வின் பொது விவாதத்தில் பங்கேற்ற போது அலி சப்ரி இம்முடிவெடுத்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அணு ஆயுதங்கள் அல்லது அணு வெடிப்பொருட்களை ஆய்வு செய்தல், உற்பத்தி செய்தல், சோதனை செய்தல், தயாரித்தல், வைத்திருத்தல் அல்லது சேமித்தல் ஆகியவற்றில் ஈடுபட, இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.