உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கப் போவதில்லை:போலந்து
2023-09-22 16:20:29

போலந்து வெளியுறவு அமைச்சகம் 20ஆம் நாள் போலந்துக்கான உக்ரைன் தூதரை அவசரமாக வரவழைத்து,19ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா.பேரவையின் 78ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில், உக்ரைன் அரசுத் தலைவர் ஜெலென்ஸ்கி தெரிவித்த சில கருத்துக்களுக்கு எதிராக கடும் மனநிறைவின்மையைத் தெரிவித்தது. அதோடு, அதேநாள் போலந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கப் போவதில்லை என்றும்  போலந்து தலைமையமைச்சர் தெரிவித்தார்.

 ஐரோப்பாவில் சிலர் அரசியல் அரங்கில் ஒற்றுமையாக இருப்பது போல் நடிப்பதோடு, தானியங்கள் தொடர்பாக திகில் கதைகளை உருவாக்கி வருகின்றனர் என்று ஜெலென்ஸ்கி 19ஆம் நாள் உரைநிகழ்த்தியபோது தெரிவித்திருந்தார்.