நேபாளத் தலைமை அமைச்சரின் சீனப் பயணம்
2023-09-22 10:45:43

சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங்கின் அழைப்பை ஏற்று, நேபாளத் தலைமை அமைச்சர் பிரசண்டா செப்டம்பர் 23முதல் 30ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். பயணத்தின் போது, 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் அவர் பங்கேற்கவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சத்தின் செய்தித் தொடர்பாள் மௌநிங் 21ஆம் நாள் தெரிவித்தார்.

இதுபற்றி மௌநின் மேலும் அறிமுகப்படுத்துகையில், இப்பயணத்தின் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரசண்டாவைச் சந்தித்துரையாடவுள்ளார். இரு நாடுகளின் பாரம்பரிய நட்புறவை ஆழமாக்குவது, கூட்டு நலன் தரும் ஒத்துழைப்பை விரிவாக்குவது, கூட்டு அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர் எனத் தெரிவித்தார்.