ஐ.நா. பொதுப் பேரவையின் 78 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் சீனத் துணை அரசுத் தலைவர் பங்கேற்பு
2023-09-22 10:50:36

சீனத் துணை அரசுத் தலைவர் ஹான்செங், செப்டம்பர் 21ஆம் நாள், நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுப் பேரவையின் 78ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார். அப்போது அவர், நியாயம் மற்றும் நீதியில் ஊன்றி நின்று, அமைதியையும் பாதுகாப்பையும் பேணிக்காத்தல், பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெற்று கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்துதல், வெளிநாட்டுத் திறப்பு மற்றும் சகிப்புத்தன்மையை நிலைநிறுத்தி, நாகரிக முன்னேற்றத்தை நாடுதல், பல தரப்புவாதத்தைப் பின்பற்றி, உலகளாவிய ஆட்சிமுறையை மேம்படுத்துதல் ஆகிய நான்கு முன்மொழிவுகளை வழங்கினார்.

தவிரவும், சீனா எப்போதும் வளரும் நாடுகளில் ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பல்வேறு நாடுகளுன் சேர்ந்து, உலகின் மேலும் அருமையான எதிர்காலத்தைப் படைக்க சீனா பாடுபடுவதையும் அவர் வலியுறுத்தினார்.