உக்ரைனுக்கு 32 கோடியே 50 இலட்சம் டாலர் மதிப்பிலான இராணுவ உதவி:அமெரிக்கா
2023-09-22 16:19:55

உக்ரைனுக்கு 32 கோடியே 50 இலட்சம் டாலர் மதிப்பிலான இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அமெரிக்க அரசு 21ஆம் நாள் அறிவித்துள்ளது.

இந்த இராணுவ உதவி, வான் தாக்குதல் எதிர்ப்பு ஏவுகணை, டாங்கி எதிர்ப்பு ஏவுகணை, ராக்கெட்டுக் குண்டுகள் முதலியவற்றைக் கொண்டிருக்கும் என்று அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் அதே நாள் வெளியிட்ட விவரப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் இது வரை, அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் அரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி உக்ரைனுக்கு 47ஆவது முறையாக இராணுவ உதவியை வழங்கியுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.