பன்னாட்டு நிறுவனத் தலைவர்களின் 4வது உச்சிமாநாடு
2023-09-22 18:56:19

பன்னாட்டு நிறுவனத் தலைவர்களின் 4வது உச்சிமாநாடு அக்டோபர் 10ஆம் நாள் முதல் 12ஆம் நாள் வரை சீனாவின் ட்சிங் தாவ் நகரில் நடைபெறவுள்ளது.

33 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 216 பன்னாட்டு நிறுவனங்கள் இவ்வுச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளன.

வெளிநாட்டு முதலீடுகளைப் பெரிய அளவில் ஈர்ப்பது, வணிகச் சூழலில் புதிய சாதனைகளை உருவாக்குவது முதலிய ஆறு கருப்பொருட்கள் குறித்து இவ்வுச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள விருந்தினர்கள் விவாதிக்கவுள்ளனர்.