பிரேசிலில் லீ ஷி அதிகாரப்பூர்வ நட்புப் பயணம்
2023-09-23 17:34:19

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் செயலாளருமான லீ ஷி, பிரேசில் அரசு மற்றும் தொழிலாளர் கட்சியின் அழைப்பை ஏற்று, செப்டம்பர் 18 முதல் 22ஆம் நாள் வரை பிரேசிலில் அதிகாரப்பூர்வ நட்புப் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது, பிரேசில் அரசுத் தலைவர், துணை அரசுத் தலைவர், நாடாளுமன்றத் தலைவர், தொழிலாளர் கட்சித் தலைவர் ஆகியோரை அவர் தனித்தனியாக சந்தித்தார்.

பிரேசில் அரசுத் தலைவர் லூலாவுடன் சந்திப்பு நடத்திய போது அவர் கூறுகையில், பிரேசிலுடன் இணைந்து பல்வேறு நடைமுறை ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, பிரிக்ஸ், ஜி20 உள்ளிட்ட பலதரப்பு இயங்குமுறைகளில் ஒருங்கிணைப்பை நெருக்கமாக்கி, மனிதகுல பொது சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும், தொழிலாளர் கட்சியுடன் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றலை வலுப்படுத்தி, தத்தமது நாட்டின் நிலைமைக்கு உகந்த நவீனமயமாக்கப் பாதையைக் கூட்டாக ஆராய்ந்து, சீன-பிரேசில் பன்முக நெடுநோக்கு கூட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.