ஹாங்சோவில் தென் கொரிய தலைமை அமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
2023-09-23 19:14:29

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்துக் கொள்ள சீனாவுக்கு வருகை தந்த தென் கொரிய தலைமை அமைச்சர் ஹான் டக்-சூவுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 23ஆம் நாள் பிற்பகல் ஹாங்சோ நகரில் சந்திப்பு நடத்தினார்.

சீனாவும் தென் கொரியாவும் அண்டை நாடுளாகவும் பிரிக்க முடியாத ஒத்துழைப்பு கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. சீன-தென் கொரிய உறவின் சீரான வளர்ச்சி, இருநாடுகள் மற்றும் மக்களின் பொது நலனுக்குப் பொருத்தமாக இருக்கும். பிரதேச அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அது துணைபுரியும் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

தென் கொரியா சீனாவுடன் ஒரே திசையில் செயல்பட்டு, இருநாட்டு உறவுக்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, நட்பு ஒத்துழைப்பு உறவைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.