வெளிநாட்டு விருந்தினர்களுக்கான வரவேற்பு விருந்து
2023-09-23 16:42:05

ஹாங்சோவில் நடைபெறவுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்க, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், அவரது மனைவி பேங் லீயுவானும் செப்டம்பர் 23ஆம் நாள் நண்பகல் வரவேற்பு விருந்தை வழங்கினர்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுடனும், பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிக் குழுக்களுடனும் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, சீனப் பாணியுடைய ஒரு சிறந்த விளையாட்டுப் போட்டியை நடத்தி, ஆசியா மற்றும் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு வளர்ச்சிக்குப் புதிய பங்காற்ற சீனா விரும்புகிறது என்றார்.

மேலும், அமைதி, ஒற்றுமை, அனைவரும் உள்ளடக்கம் ஆகியவற்றின் மீதான ஆசிய மக்களின் எதிர்பார்ப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டி வெளிப்படுத்துகிறது. விளையாட்டுத் துறையின் மூலம் அமைதி, ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை முன்னேற்றி, வரலாற்று வாய்ப்புகளைப் பயன்படுத்தி கடைப்பிடித்து, ஒத்துழைப்புகளின் மூலம் அறைகூவல்களைச் சமாளித்து, ஆசிய நாகரிகத்தின் புதிய சாதனைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.