ஆசிய மக்களின் உறுதியான ஆதரவைப் பெற்ற ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி
2023-09-24 17:12:57

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் நாளிரவு சீனாவின் ஹாங்சோ நகரில் துவங்கியது.

ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெறுவது இது 3வது முறையாகும். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேலான வீரர்கள் இவ்விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உறுதி செய்தனர்.

ஆசியாவில் மிக உயர்நிலை கொண்ட இவ்விளையாட்டுப் போட்டி, அமைதி, ஒற்றுமை, அனைவரும் உள்ளடக்கம் ஆகியவற்றின் மீதான ஆசிய மக்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது. விளையாட்டுத் துறையின் மூலம் அமைதி, ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை முன்னேற்ற வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வரவேற்பு விருந்தில் விருப்பம் தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக, ஆசிய நாடுகளின் பொருளாதாரம் உயர்வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், ஆசியாவுக்கு அப்பாலுள்ள குறிப்பிட்ட சில நாடுகள் பனிப் போர் சிந்தனையுடன் ஆசியாவில் முரண்பாடுகளைத் தீவிரமாக்கி, பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையைச் சீர்குலைத்து வருகின்றன. இந்நிலையில், விளையாட்டின் மூலம், அமைதி மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்த ஆசிய மக்கள் விரும்புகின்றனர்.

ஆசிய பண்பாட்டின் செழுமை மற்றும் ஈர்ப்பு ஆற்றலை ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி வெளிப்படுத்தியுள்ளது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில், பல்வகைமைக்கு மதிப்பு அளித்து, திறப்பு மற்றும் புத்தாக்கம் கொண்ட மனப்பாங்கு, மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆசிய மக்களின் உறுதியான ஆதரவுடன், ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியையும், ஆசிய மக்களின் ஒற்றுமை மற்றும் நட்புறவையும் முன்னேற்றுவதற்குப் புதிய பங்காற்றும்.