அமெரிக்க அரசியல்வாதிகளின் அதிகார விளையாட்டு!
2023-10-05 16:29:43

படம்-CFP

9 மாதங்கள் மட்டுமே பதவி வகித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி அமெரிக்க நாடாளுமனறத்தின் பிரதிநிதிகள் அவைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அக்டோபர் 3ஆம் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பின் படி, 216 ஆதரவு வாக்குகள் மற்றும் 210 எதிர்ப்பு வாக்குகள் என்ற முடிவில் கெவின் மெக்கார்த்தியை பதிவில் இருந்து நீக்கம் செய்யும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

பிரதிநிதிகள் அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் முதன்முறை ஆகும்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவு வெளியிடப்பட பிறகு, பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏன்னென்றால், பிரதிநிதிகள் அவையில் குடியரசுக் கட்சி மொத்த 221 இடங்களைப் பிடித்துள்ளது. இது, ஜனநாயக கட்சியின் 212 இடங்களை விட அதிகம். ஆனால், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் 8 பேரும் மெக்கார்த்தியின் பதவி நீக்கத்தை ஆதரித்து வாக்களித்தனர். இந்நிலையில், கெவின் மெக்கார்த்தி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு குறித்து ஏற்பட்ட சர்ச்சை  இதன் நேரடி காரணம் என்று பொதுவாக கருதப்படுகிறது.  ஆண்டுதோறும் அக்டோபர் 1ஆம் நாள்  முதல், அமெரிக்க ஃபெடரல் அரசின் நிதியாண்டு தொடங்குகிறது. செப்டம்பர் திங்கள் தொடங்கி, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சிக்கு இடையே புதிய நிதியாண்டில் நிதி வரவுச் செலவுத் திட்டம் குறித்து சர்ச்சை தீவிரமாகி வருகிறது. கடன் வரம்புக் காரணமாக அரசுத் துறைகள் மூடப்படாமல் தவிர்க்கும் வகையில், செனட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவையில் தற்காலிக நிதி ஒதுக்கீடு பற்றிய மசோதா ஒன்று முறையே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. செப்டம்பர் 30ஆம் நாள், இறுதி நேரத்தில் கெவின் மெக்கார்த்தி ஜனநாயக கட்சி உறுப்பினர்களுடன்  ஒருங்கிணைத்து,  தற்காலிக நிதி ஒதுக்கீட்டிற்கான மசோதாவை நிறைவேற்றினார். ஆனால், பெருமளவில் நிதிச் செலவை குறைப்பது, எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது போன்ற குடியரசுக் கட்சியின் பழமைவாத பிரிவின் கோரிக்கைள், இந்த மசாதாவில் சேர்க்கப்படவில்லை. இது,  குடியரசுக் கட்சிக்குள் உள்ள முரண்பாட்டை தீவிரமாக்கியுள்ளது.

அமெரிக்க அறிஞரான ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா கூறியதைப் போல, அமெரிக்காவின் அமைப்புமுறையில் தெளிவான சிக்கல் நிலவுகிறது. அதேவேளையில், சுய சீர்திருத்தம் நிறைவேற்றப்பட முடியாது. அமெரிக்காவின் அரசியல், சிலரின் நலன்களுக்காகவே சேவை அளிக்கிறது. அமெரிக்காவின் ஜனநாயகம், அதிகாரம் ரீதியிலான விளையாட்டு ஆகும். எனவே, அமெரிக்க அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை எவ்வளவு மீதமுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.