பெரிய வரைவு முதல் விரிவான சாதனை வரை:கடல் வழியுடன் இணைக்கப்பட்ட கசகஸ்தான்
2023-10-05 20:00:06

2000 ஆண்டுகளுக்கு முன்பு, பழைய பட்டு பாதை, கசகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவைக் கடந்து சென்றது. குமிலியோவ் யுரேசிய தேசிய பல்கலைக்கழகத்திலுள்ள கம்ஃபூசியஸ் கழகத்தின் கசகஸ்தான் தரப்பின் இயக்குநர் சாவ்லே குஷனோவா கூறுகையில்

இரு நாடுகளுக்கிடையே, நாட்டு மக்களிடையேயான பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது. இது, பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குவதன் அடிப்படையாகும். கடந்த 10 ஆண்டுகளில் பெறப்பட்டுள்ள சாதனைகள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பின் முதல் இடமாக கசகஸ்தானைக் கொள்வது மிகவும் சரியான தேர்வாகும் என்று குறிப்பிட்டார்.

2013ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நஜர்பாயேவ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகையில்

ஐரோப்பிய-ஆசிய நாடுகளிடையே பொருளாதார தொடர்புகளை நெருக்கமாக்கி, ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, வளர்ச்சி வாய்ப்பைகளை விரிவாக்கும் வகையில், ஒத்துழைப்பு வழிமுறையை புத்தாக்கம் செய்யலாம். பட்டுப் பாதைப் பொருளாதார மண்டலத்தை கூட்டாக கட்டியெழுப்ப போகிறோம். இது, பல்வேறு நாடுகளின் மக்களுக்கு நலன் பயக்கும் பெரிய பணியாகும் என்று கூறினார்.

அஸ்தானாவின் கிழக்கு திசையில் இருந்து 4000 கிலோமீட்டர் தொலைவில், சீனாவின் லியன்யுன்காங் நகரிலுள்ள ஒரு சாதாரணமான சரக்குத் தளம், எதிர்பாராத வாய்ப்புகளை பெற்றுள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்னெடுப்பு முன்வைக்கப்பட்ட பிறகு, லியன்யுன்காங் நகரிலுள்ள சீனா-கசகஸ்தான் சரக்குப் போக்குவரத்து ஒத்துழைப்புத் தளம் என்ற திட்டம், அங்கு செயலுக்கு வந்தது. முன்பு 50ஆயிரம் சதுர மீட்டர் அளவான சரக்கு சேமிப்பிடம், 2.2லட்சம் சதுர மீட்டரான சர்வதேச சரக்கு போக்குவரத்து தளமாக விரிவாகுவதற்கு 8 மாதங்கள் மட்டும் செலவிடப்பட்டுள்ளது.

கசகஸ்தானில் சாகுபடி செய்யப்படும் கோதுமை, நல்ல தரம் மற்றும் அதிக விளைச்சலுடன் உலகளவில் புதழ்பெற்றது. ஆனால், கடல் துறைமுகம் இல்லாமல், அந்நாடு வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் நிறைய சிரமங்களைச் சந்தித்திருந்தது.

சீனா-கசகஸ்தான் சரக்குப் போக்குவரத்து ஒத்துழைப்புத் தளம்  இந்த நிலையை மாற்றியுள்ளது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாள், 720 டன் கோதுமைகளை ஏற்றிச்சென்ற தொடர்வண்டி ஒன்று, கசகஸ்தானில் இருந்து இந்த சரக்குத் தளத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த கோதுமை, கடல்வழி போக்குவரத்து மூலமாக வியட்நாம் நாட்டிற்கு அனுப்பப்பட்டது. அப்போது முதல், கசகஸ்தானின் கிழக்கு திசையில் ஏற்றுமதிப் பாதை திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2017ஆம் ஆண்டு ஜுன் திங்கள், கசகஸ்தானில் 3ஆவது முறையாக பயணம் மேற்கொண்ட ஷிச்சின்பிங், சீனா-கசகஸ்தான் எல்லையை தாண்டிய போக்குவரத்து ஒத்துழைப்பு பற்றிய காணொளியைப் பார்த்த பிறகு உரை நிகழ்த்துகையில்,

இரு தரப்பும் தொடர்ந்து ஒருங்கிணைப்பை மேற்கொண்டு, லியன்யுன்காங் மற்றும் ஹோர்கோஸ் மூலமாக இணைக்கப்பட்ட புதிய ஆசிய-ஐரோப்பிய தரை-கடல் பாதையை ஒத்துழைப்பு மாதிரியாக உருவாக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளில், பெரிய வரைவு முதல் விரிவான சாதனை வரை, சீனா மற்றும் கசகஸ்தான் இடையே ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்கான ஒத்துழைப்பு இடைவிடாமல் விரிவாகி வருகிறது.

பண்டைக்காலத்தில் பழைய பட்டுப் பாதையில் ஒட்டக அணி முதல், இன்று ஆசிய-ஐரோப்பிய கண்டங்களில் ஓடும் தொடர்வண்டி வரை, ஆயிரம் ஆண்டுக்கால நட்புறவு தொடர்கிறது. சீனா மற்றும் கசகஸ்தான் இடையேயான  தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு இடைவிடாமல் புதிய அத்தியாயங்களை எழுதி வருகிறது.