பெரிய வரைவு முதல் விரிவான சாதனை வரை:ஹிவா பண்டைய நகரின் மறுமலர்ச்சி
2023-10-06 18:34:17

ஒரு பை தங்கம் கொண்டு சென்று ஹிவா நகரைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு பழமொழி, மத்திய ஆசியாவில் பரவி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பண்டைய பட்டுப்பாதையிலுள்ள முக்கிய தளமான ஹிவா நகரில், வணிகர்கள் ஒன்றுகூடி வர்த்தகம் செய்திருந்தனர்.

2022ஆம் ஆண்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தனது மூன்றாவது உஸ்பெக்ஸ்தான் பயணத்தின் போது, அந்நாட்டின் அரசுத் தலைவர் மிர்சியொயேவுக்கு ஒரு சிறப்பு அன்பளிப்பு அளித்தார். அது, சீன-உஸ்பெக்ஸ்தான் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட ஹிவா நகர் சிதிலங்களின் நுண்ணிய மாதிரியாகும். இரு நாட்டுத் தலைவர்கள், தூதாண்மை முயற்சி மூலம், சீன-உஸ்பெக்ஸ்தான் நாகரிகப் பரிமாற்றத்தைத் தூண்டும் ஒரு கதை, இப்பரிசுக்குக் காரணமாகும்.

சீனா, மத்திய ஆசியாவில் மேற்கொண்ட முதலாவது பண்பாட்டு மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கும் திட்டப்பணி, ஹிவா பண்டைய நகர் ஆகும். முழுமையான பண்டைய கட்டிடங்கள், கிழக்கு மற்றும் மேலை நாகரிகத் தொடர்பின் வரலாற்றின் நினைவுகள் முதலியவை இந்நகரில் பதிந்துள்ளன. ஆனால், நீண்டகாலமாக பழுது பாராமல் கிடந்த நிலையில், சில கட்டிடங்கள் இடிந்து விழுந்து சிதைந்த நிலையில் உள்ளன.

6 ஆண்டுகள் நீடித்த ஹிவா நகரின் பராமரிப்புப் பணியில், சீனாவின் தொல்பொருள் நிபுணர்கள், உள்ளூர் மக்களுடன் இணைந்து, பழைய கட்டிடங்களின் முழுமையான தகவல்களை இயன்றளவில் சேமித்துள்ளனர். செழுமையான பட்டுப் பாதையில் ஆயிரம் ஆண்டுகளாக நின்ற இந்நகர், பெருமை மற்றும் நம்பிக்கையை மீண்டும் மக்களுக்குக் கொண்டு சென்றது.

பல்வகை தன்மையால், நாகரிகப் பரிமாற்றம் தேவை. நாகரிகப் பரிமாற்றத்தால், ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக்கொள்ள வேண்டும். பரஸ்பரக் கற்றலால், நாகரிகம் வளர்ச்சி அடைகிறது. சொந்த நாட்டின் நாகரிகம் உயிராற்றல் மிக்கதாக இருப்பதோடு, மற்ற நாடுகளின் நாகரிக வளர்ச்சிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். உலகளவில் பல்வேறு நாகரிகங்கள், செழிப்புடன் ஓங்கி வளர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், சீனா, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் கலந்து கொண்ட 17 நாடுகளுடன், 33 தொல்லியல் திட்டப்பணிகளைக் கூட்டாக நடத்தி, வரலாற்று சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஒத்துழைப்பை ஆக்கமுடன் முன்னெடுத்து வருகிறது.