உலகப் பொருளாதாரத்துக்கு நம்பிக்கை தரும் சீனப் பொருளாதாரம்
2023-10-08 15:14:02

சீனாவின் நிலா விழா மற்றும் தேசிய தின விடுமுறை நாட்களில், உள்நாட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 82.6கோடியைத் தாண்டியுள்ளது. சுற்றுலா வருமானம் 75343கோடி யுவானை எட்டியுள்ளது. திரைப்பட வசூல் 273கோடி யுவானை ஈட்டியுள்ளது. நாடளவில் இருப்புப்பாதை மூலம் அனுப்பப்பட்ட பயணிகளின் மொத்த எண்ணிக்கை 16கோடியைத் தாண்டியுள்ளது. இது, சீனாவின் நுகர்வுச் சந்தை செழுமையாக வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. சுற்றுலா ஏற்றம், சீனப் பொருளாதாரம் மீட்சி பெறுவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது என்று ஜெர்மனியின் ஃப்.ஏ.ஸி. நாளேடு அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது.

சீன மக்களுக்குத் தேசிய விழா முழு ஆண்டிலும் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாகும். மக்கள் இந்த நீண்ட விடுமுறையின் போது சுற்றுலா பயணம் மேற்கொண்டு பொருட்களை வாங்குவது வழக்கம்.

அமெரிக்க வால் ஸ்ட்ரீட் நாளேட்டின் இணையத்தளத்தில் குறிப்பிடுகையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வட்டி விகித உயர்வால் நுக்ரவோர் மற்றும் தொழில்நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், சீனப் பொருளாதாரம் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை வெளிக்காட்டி உலகப் பொருளாதாரத்துக்கு நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது. சிட்டி குழுமம், கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் இவ்வாண்டுக்கான சீனாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டை உயர்த்தியுள்ளன.

உலகப் பொருளாதார வளர்ச்சியில் உந்து ஆற்றல் பற்றக்குறையாக இருந்த சூழலில், சீனப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி போக்கில் உலகப் பொருளாதாரத்தின் மீட்சியை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது, சீனப் பொருளாதார வளர்ச்சி முடங்கிவிடும் என்று எதிர்மறை குரலை ஒலிக்காமல் செய்யும்.