19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி உலகத்துக்கான சிறப்பு பரிசு
2023-10-09 12:47:37

அக்டோபர் 8ஆம் நாளிரவு, 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நிறைவடைந்தது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் இடைக்காலத் தலைவர் ராஜா ரந்தீர் சிங் அதன் நிறைவு விழாவில் மதிப்பிடுகையில், நடப்பு விளையாட்டுப் போட்டி தலைசிறந்தது என்றும், மறக்க முடியாததது என்றும், முன்பு கண்டிராத வெற்றியைப் பெற்றுள்ளது என்றும் கூறினார்.

விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை,விளையாட்டு பிரிவுகள் மற்றும் ஒட்டுமொத்த அளவில், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முன்பு கண்டிராத புதிய பதிவாகியுள்ளது. அதோடு, வீரர்கள் மக்களை ஆச்சரியப்பட்ட சாதனைகளைப் பெற்றுள்ளனர். 15முறையாக புதிய உலக சாதனைகள் பதிவாகின. 37முறையாக புதிய ஆசிய சாதனைகள் படைக்கப்பட்டன. 170முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதிவுகள் முறியடிக்கப்பட்டன.

45 பிரதிநிதிக் குழுக்களில், 27 குழுக்கள் தங்க பதக்கம் வென்றன. 41குழுக்கள் பதக்கங்களைப் பெற்றன. பதக்கங்கள் பெற்ற பிரதிநிதிக் குழுக்களின் எண்ணிக்கை ரீதியில் நடப்புப் போட்டி, முன்பை விட மிக அதிகமாகும்.

மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது, விளையாட்டு உபகரணங்களை அனுப்பிய ரோபோ நாய், ஓட்டுநர் இல்லாத நுண்மதி வாகனம் உள்ளிட்ட உயர் அறிவியல் தொழில்நுட்ப அம்சங்கள் உலகளாவிய செய்தி ஊடகங்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

டிஜிட்டல் முறையில் தீ எரிப்பு சடங்கு உள்ளிட்ட பல முதலாவது புத்தாக்க முயற்சிகளால், எண்ணியல் மயமாக்க ரீதியில் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் மிக அதிகமாகும்.

மேலும், ஜப்பானிய கியோடோ நியூஸ் எனும் செய்தி நிறுவனம் கூறுகையில், பசுமை எரியாற்றல் முதல் எரியாற்றல் சிக்கன கட்டிடங்கள் வரை, பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியின் முயற்சிகள் பாராட்டத்தக்கத்தாகும் என்று தெரிவித்தது.

மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு, அனைத்து விளையாட்டு அரங்குகளின் பயன்பாடு திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் சில நகரவாசிகளுக்குத் திறக்கப்படும். சில இளைஞர்களுக்கான பயிற்சித் தளமாக மாறும்.