தொடர்ந்து வளர்ச்சியடையும் சீன அன்னிய வர்த்தகம்
2023-10-14 16:56:12

இவ்வாண்டு முதல் மூன்று காலாண்டில், வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு அறைகூவல்களைச் சந்தித்த சீன அன்னிய வர்த்தகம், நிலையாகவும் சீராகவும் வளர்ந்து வருகின்றது. சீன அரசு 13ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின் படி, இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டில், சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 30.8 இலட்சம் கோடி யுவானை எட்டியது. அதிகரிப்பு வேகம், கடந்த ஆண்டின் இதே காலத்துடன் சமநிலையில் இருந்தது.

இவ்வாண்டில் உலகப் பொருளாதாரம் சரியாக மீட்சியடையவில்லை. சர்வதேச வர்த்தகம், நிறைய அறைகூவல்களைச் சந்தித்துள்ளது. பாரம்பரிய மேம்பாடுகளை நிலைநிறுத்துவது, புதிய உந்து சக்திகளைத் தேடி பார்ப்பது ஆகியவை சீன அன்னிய வர்த்தகம் நிறைய சாதனைகளைப் பெற்றதற்கான காரணமாகும்.

அதேவேளையில், உயர் தர வெளிநாட்டு திறப்புப் பணியை சீனா தொடர்ந்து முன்னேற்றுவது, அன்னிய வர்த்தகத்திற்கு துணை புரியும். இவ்வாண்டு முதல் மூன்று காலாண்டில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் சேர்ந்த நாடுகளுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 14.32 இலட்சம் கோடி யுவானாகும். இத்தொகை கடந்த ஆண்டில் இருந்ததை விட 3.1 விழுக்காடு அதிகம். இத்தொகை, மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகையில் 46.5 விழுக்காடு வகிக்கின்றது குறிப்பிடத்தக்கது.