சீனச் சந்தையைத் தேர்ந்தெடுத்த அன்னிய முதலீடு
2023-10-19 20:26:47

6வது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி விரைவில் துவங்கவுள்ளது. அதில் பல நாடு கடந்த தொழில் நிறுவனங்கள் புதிய புத்தாக்கச் சாதனைகளைக் காட்டவுள்ளன.

இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 91 இலட்சம் கோடியைத் தாண்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.2 விழுக்காடு அதிகரித்தது. தற்போது உலக பொருளாதார மீட்சிக்கு சீனா தலைமை தாங்குகிறது என்று நிபுணர்கள் பலர் தெரிவித்தனர். சந்தை அளவு, பொருளாதார அதிகரிப்பு, நுகர்வோரின் பாராட்டு ஆகியவை, நாடு கடந்த தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்த 3 காரணிகள் ஆகும்.

சீனாவிலுள்ள அன்னிய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதோடு, அவற்றில் பெரும்பாலும், அதிக லாபம் ஈட்டியுள்ளன. இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனாவில் புதிதாக சேர்ந்த அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, 33 ஆயிரத்தைத் தாண்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட 33 விழுக்காடு அதிகரித்தது. எனவே, அன்னிய முதலீடு சீனாவிலிருந்து வெளியேறியது என்ற கூற்று, நகைப்பிற்குரியது.

நுகர்வு சந்தையைத் தவிர, சீனாவின் வர்த்தகம், உலகின் தொழில் மற்றும் விநியோகச் சங்கிலி இயக்கத்துக்குத் துணை புரிகிறது. குறிப்பாக சீனாவுக்கும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்குமிடையே வர்த்தக வளர்ச்சி முனைப்புடன் காணப்படுகிறது.

தற்போது 134வது சீன ஏற்றுமதி இறக்குமதி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. உலகின் 200க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த வணிகர்கள் அதில் கலந்து கொள்கின்றனர். இவை, சீனச் சந்தையின் வலிமைமிக்க ஈர்ப்பாற்றலையும் உயர்தர வளர்ச்சியின் புதிய உந்து சக்தியையும் வெளிக்காட்டியுள்ளன.