நவீனமயமாக்கப் போக்கில் சீனாவின் நடவடிக்கைகள் ஆதரவு
2023-10-19 15:01:34

நவீனமயமாக்கம் என்பது மக்களின் பொதுவான எதிர்பார்ப்பு. இது, உலகளாவிய சிக்கலாகவும் திகழ்கிறது. தற்போது, உலக அளவில் 20க்கும் அதிகமான நாடுகள் மட்டும் நவீனமயமாக்கலை அடைந்துள்ளன. பரந்த அளவிலான வளரும் நாடுகள் சொந்தமான நவீனமயமாக்கும் இலக்கை எவ்வாறு அடைய முடியும்? 

18ஆம் நாள் நடைபெற்ற சர்வதேச ஒத்துழைப்புக்கான 3ஆவது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக்கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்திய போது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்திற்கு ஆதரவாக 8 அம்ச நடவடிக்கைகளை அறிவித்து, மனவுறுதியை வெளிப்படுத்தினார். இந்த எட்டு நடவடிக்கைகள், தெளிவான இலக்குகளைக் கொண்டுள்ளதாகவும், புதிய யுகத்தில் வளர்ச்சித் தேவைகளுக்குப் பொருந்தியதாகவும் இருக்கின்றன. மேலும், இது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாக கட்டியெழுப்புவதற்கு வழிகாட்டும் அதேவேளையில் உலக நவீனமயமாக்கத்துக்குப் புதிய உந்து சக்தி வழங்குகிறது.  

மாலத்தீவில் வரலாற்றில் முதல் கடல் பாலம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவின் தொலைதூர கிராமப்புறங்களில் இணைய சேவை கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் டேஆர் காற்றாலை மின் உற்பத்தி உற்பத்தியின் மூலம் அந்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் பசுமைசார் ஆற்றலைப் பயன்படுத்தி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் முன்மாதிரியான ஒத்துழைப்புத் திட்டங்கள், நிறைய சாதனைகள் பெற்றப்பட்டுள்ளன. இவை, பல நாடுகள் சொந்தமான வளர்ச்சி அடைவதற்கு உதவியதோடு அந்நாடுகள் நவீனமயமாக்கும் போக்கைத் துரிதப்படுத்தி வருகிறது.

அண்மையில், சீனாவும் இந்தோனேசியாவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு கட்டி அமைத்துள்ள ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதை முற்றிலும் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் உயர் தர வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு இது துணை புரியும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாக கட்டியெழுப்புவதில் நல்ல எதிர்காலம் மீது மக்கள் நம்பிக்கை கொள்கின்றனர். இலக்குகளை நிறைவேற்று, சிறந்த சாதனைகளை பெற்று, பெரிய விஷயங்களைச் செயல்படுத்துவதற்கு ஒத்துழைப்புடன் கூட்டுவெற்றி பெறுவது மிகவும் இன்றியமையாதது. அடுத்த 10 ஆண்டுகளில், பல்வேறு நாடுகளின் நவீனமயமாக்கப் போக்கிற்கு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.