புதிய இணைப்பு வலைப்பின்னலை உருவாக்குவதில் புதிய வாய்ப்பு
2023-10-20 09:41:03

ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படும் தன்மையானது ஐரோப்பாவுக்கு போட்டித்திறனை மீட்டெடுக்கும் வாய்ப்பை அளிக்கும் என்று ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஓர்பன், ஹங்கேரி-செர்பியா இருப்புப்பாதைக் கட்டுமானம் குறித்து கூறுகையில் சுட்டிக்காட்டினார். ஐரோப்பா உள்ளிட்ட உலகம், ஒன்றுடன் ஒன்று இணைந்து புதிய வாய்ப்பை தேட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஹாங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஓர்பன் குறிப்பிட்ட இந்த இணைப்பு, பட்டுப் பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் கடல்வழிப் பட்டுப் பாதையைக் கூட்டாக கட்டியெழுப்புவதன் முக்கியப் பகுதியாகும்.

வசதியான வாழ்க்கை வாழ முதலில் நல்ல சாலையை அமைக்க வேண்டும் என்ற பிரபலமான கூற்று உண்டு. இந்நிலையில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழவின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில், காங்கோ குடியரசின் 1-ஆவது தேசிய நெடுஞ்சாலை, குரோஷியாவில் தெற்கு மற்றும் வடக்கை இணைக்கும் பெல்ஜேசாக் பாலம், பிரேயஸ் துறைமுகம் போன்றவை கட்டியமைக்கப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாதனைகள், உள்ளுர் மக்களின் வாழ்க்கைக்கு நன்மை அளித்துள்ள அதேவேளையில், அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் அதிகரித்து, உலகளாவிய வளர்ச்சி பல அறைகூவல்களை எதிர்கொண்டு வருகின்றது. புதிய துவக்க புள்ளியிலுள்ள ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம், ஒன்றுடனொன்று இணைப்பு மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை எப்படி முன்னேற்றுவது என்னும் கேள்வி எழுகின்றது. இதன் பொருட்டு சர்வதேச ஒத்துழைப்புக்கான 3ஆவது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தில் புதிய ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, கடல், தரை மற்றும் வான் வழிகளில் மட்டுமல்லாமல், இணையம், நிதி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளிலும் இணைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்னும் கருத்து முன்மொழியப்பட்டுள்ளது. இது, புதிய யுகத்தில் கால ஓட்டத்திற்கு ஏற்ற வளர்ச்சித் தேவைக்குப் பொருந்தியதாகவும் ஒன்றுடன் ஒன்று இணைப்பு குறித்த உள்ளடக்கங்களை அதிகரிப்பதாகவும் இருக்கும்.