காய்ஃபொங் நகரின் 41வது சாமந்திப்பூ பண்பாட்டு விழா முதலீட்டின் விரிவாக்கப் பரப்புரை நிகழ்ச்சி
2023-10-20 15:50:16

சீனாவின் காய்ஃபொங் நகரின் 41வது சாமந்திப்பூ பண்பாட்டு விழா முதலீட்டின் விரிவாக்கப் பரப்புரை நிகழ்ச்சி மற்றும் தொழிற்துறை ஒத்துழைப்புக்கான பரிமாற்றக் கூட்டம் அக்டோபர் 18ஆம் நாள் இந்நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட 5 அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் திட்டப்பணிகள், 38 நிதியங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களை ஈர்த்துள்ளன.

நடப்பு சாமந்திப்பூ பண்பாட்டு விழாவின்போது, வாகனம் மற்றும் உதிரிப்பாகங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்களின் பதனீடு உள்ளிட்ட முக்கியத் தொழில் துறைகள் குறித்து, வணிகர் முதலீட்டின் விரிவாக்கத்துக்கான 11 சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 92 திட்டப்பணிகள் கையொப்பமிடப்படும். மொத்த முதலீட்டுத் தொகை 4 ஆயிரத்து 434.3 கோடி யுவானாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.