உலக நவீனமயமாக்கலை விரைவுபடுத்தும் எண்ணியல் பட்டுப்பாதை
2023-10-21 20:08:48

செழுமைக்குச் செல்லும் பாதை எனும் ஆவணப்படத்தில், நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள் மூலம் தூதஞ்சல்களை அனுப்பும் ஜோன் ஆண்ட்ரு அறிமுகம் செய்யப்பட்டார். இந்த வேலை அவருக்கு நல்ல வருமானம் தருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு எண்ணியல் பொருளாதாரத்துடன் சீராக இணைவதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தற்போது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் உயர்தர வளர்ச்சி கட்டத்தில் நுழைந்ததோடு, உலக எண்ணியல் பொருளாதார வளர்ச்சி புதிய வாய்ப்பைக் கண்டுள்ளது. சர்வதேச ஒத்துழைப்புக்கான 3ஆவது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உரை நிகழ்த்தியபோது, பட்டுப்பாதை மின் வணிக ஒத்துழைப்புக்கான முன்னோடி பகுதியை சீனா உருவாக்கவும், ஆண்டுதோறும் உலக எண்ணியல் வர்த்தகப் பொருட்காட்சியை நடத்தவும் உள்ளதாகத் தெரிவித்தார். சீனா சில நாடுகளுடன் இணைந்து, சர்வதேச எண்ணியல் பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய பெய்ஜிங் முன்னெடுப்பு உள்பட ஆவணங்களை வெளியிட்டது. சீனாவுக்கும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் கூட்டாளி நாடுகளுக்கும் இடையே எண்ணியல் பொருளாதார ஒத்துழைப்பு நடைமுறையில் ஆழமாக்கப்படும் என பொதுவாகக் கருதப்படுகிறது.

எண்ணியல் தொழில் நுட்பம், எண்ணியல் உள்கட்டமைப்பு, எண்ணியல் சந்தை ஆகியவற்றில் கூட்டாளி நாடுகளுடன் பிரந்த ஒத்துழைப்புகளை மேற்கொள்வது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் முக்கிய திசையாகும். சீனாவின் பங்களிப்பு மற்றும் முயற்சியுடன், எண்ணியல் பட்டுப்பாதை கட்டுமானத்தில் அதிக சாதனைகள் பெறப்பட்டுள்ளன.

5ஜி அடிப்படை நிலையம், தரவு மையம், மேக கணிமை மையம், பொலிவுறு நகரம் முதலியவை பல நாடுகளில் நடைமுறைக்கு வந்துள்ளன. பல நாடுகளின் துறைமுகம், இருப்புப்பாதை, நெடுஞ்சாலை, நீர் சேமிப்பு உள்ளிட்ட வசதிகள் எண்ணியல் முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுக்கோப்புக்குள் தற்போதைய எண்ணியல் பொருளாதார ஒத்துழைப்பு புதிய நிலையில் உள்ளது. சீனா புதிதாக முன்வைத்த செயல்திட்டங்களில் எண்ணியல் பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் அம்சங்கள் உள்ளன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தர கட்டுமானத்துக்கான புதிய 10 ஆண்டுகளில், எண்ணியல் தொழில் நுட்ப புத்தாக்கம் மற்றும் பகிர்வை சீனா தொடர்ந்து முன்னேற்றி, கூட்டாளி நாடுகள் இந்த எண்ணியல் பட்டுப்பாதையின் வழியாக கூடியவிரைவில் நவீனமயமாக்கம் அடைய உதவும்.