ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்திலுள்ள பசுமை வளர்ச்சி
2023-10-21 18:43:12

பசுமையான பட்டுபாதை, மனித குலம் மற்றும் பூமிக்கு நன்மை புரியும் புதிய பாதை என்று ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் சர்வதேச ஒத்துழைப்புக்கான 3ஆவது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக்கூட்டத்தில் தெரிவித்தார்.

பசுமையானது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் அடிப்படையாகும். தென் அமெரிக்கப் பீடபூமியில் கட்டியமைக்கப்பட்ட ஒளிவால்ட்டா மின் நிலையம், மத்திய ஆசியாவில் மிகப் பெரிய காற்று ஆற்றல் மின் உற்பத்தித் திட்டப்பணி, தெற்காசியாவில் கட்டியமைக்கப்பட்ட நீர் மின் நிலையம் முதலியவை, உள்ளூர் எரியாற்றல் பற்றாக்குறையைத் தணித்து, பல்வேறு நாடுகளின் நவீனமயமாக்க வளர்ச்சிக்குப் பெரிய ஆதரவளித்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில், 40 நாடுகளின் 150 ஒத்துழைப்புக் கூட்டாளிகளுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் பசுமை வளர்ச்சிக்கான சர்வதேச ஒன்றியத்தை சீனா உருவாக்கியது. 32 நாடுகளுடன், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எரியாற்றல் ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை சீனா உருவாக்கியது. கொள்கை மற்றும் திட்டப்பணிகளின் மூலம், உலகளாவிய கரி குறைந்த வளர்ச்சி மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கு சீனா முக்கியப் பங்காற்றி வருகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரக் கட்டுமானத்துக்கு ஆதரவு அளிக்கும் 8 நடவடிக்கைகளை சீனா நடப்பு மன்றக்கூட்டத்தில் முன்வைத்தது. பசுமை வளர்ச்சியை முன்னேற்றுவது அவற்றில் ஒன்றாகும்.

தொலைநோக்குப் பார்வையுடன், பசுமை வளர்ச்சியுடைய மாற்றம், மனித குலத்தின் பொது தாயகத்தைப் பாதுகாப்பதற்குத் துணைப் புரியும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரக் கட்டுமானத்தில், பசுமை எரியாற்றல் வளர்ச்சி உள்ளிட்ட புதிய நடவடிக்கைகள், உலகளவில் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது, காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்குப் பங்காற்றும்.