© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பிலிப்பைன்ஸின் 2 பயணியர் கப்பல்களும் 2 காவற்துறை கப்பல்களும் சீன அரசின் அனுமதியின்றி சீனாவின் ரென்ஐ கடல்திட்டு அமைந்துள்ள கடற்பரப்பில் நுழைந்து, அங்கே இயல்பான பணியில் ஈடுபட்ட சீன கப்பல்களின் மீது ஆபத்தான முறையில் மோதின. இது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ் தரப்பு அவதூறு பரப்பி, சீனா ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டதாகவும் தவறாகக் குற்றஞ்சாட்டியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சொந்த உரிமையைப் பேணிக்காக்கும் வகையில் நியாயமான சட்ட அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்ட சீனாவைக் குறைகூறியது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும், அமெரிக்காவும் பிலிப்பைன்ஸும் ஒத்துழைப்பு மூலம் முன்கூட்டியே சதி செய்து இச்சம்பவத்தை ஏற்படுத்தியது தெளிவாகிறது.
ரென்ஐ கடல்திட்டு, சீனாவின் நான்ஷா தீவுகளின் ஒரு பகுதி, சீனாவின் உரிமை பிரதேசமாகும் என்பது சர்வதேசச் சமூகத்தின் பொது கருத்து. ஐ.நா. சாசனம் உள்பட சர்வதேச சட்டங்களுக்கும் இது பொருத்தமானது. 24 ஆண்டுகளுக்கு முன், பிலிப்பைன்ஸ் தனது போர்க்கப்பலை ரென்ஐ கடல்திட்டு பகுதியில் சட்ட விரோதமாக ஒதுங்க வைத்தது. இது, சீனாவின் இறையாண்மையைக் கடுமையாக மீறியது. இப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், சீனா பெரும் கட்டுப்பாடு மற்றும் பொறுமையுடன் பிலிப்பைன்ஸுடன் பல்வேறு நிலையில் நெருக்கமான தொடர்பு மேற்கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு காலத்தில் இருதரப்பும் தொடர்புடைய நிலைமையைக் கட்டுப்படுத்தி, புரிந்துணர்வை எட்டியிருந்தன.
ஆனால் இவ்வாண்டில் பிலிப்பைன்ஸ் தரப்பு பல முறை சீனாவின் கடற்பரப்பில் நுழைந்து வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டுள்ளது. அதன் வழமைக்கு மாறாத செயல்கள் குறித்து, தென்கிழக்காசிய விவகார ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், அமெரிக்கா தான் இதற்கான பின்னணி காரணம் என்று சுட்டிக்காட்டினார். தற்போது சீனாவைத் தடுப்பதற்கான இந்தோ-பசிபிக் நெடுநோக்கை அமெரிக்கா விரைவுபடுத்தி வருகிறது. இதில் தென்கிழக்காசியா ஒரு முக்கியப் பகுதி. சீனா-அமெரிக்கா இடையே தெரிவு செய்ய குறிப்பிட்ட நாடுகளைக் கட்டாயப்படுத்தி, தென் சீனக் கடல் பிரச்சினையைப் பயன்படுத்தி, அவற்றுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாட்டை உண்டாக்கி, பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பது அமெரிக்காவின் உள்நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
ரென்ஐ கடல்திட்டு பிரச்சினை, சீனா மற்றும் பிலிப்பைன்ஸுடன் தொடர்புடைய இருதரப்பு பிரச்சினை. இதில் தலையிட அமெரிக்காவுக்கு உரிமை இல்லை. பிரச்சினையை ஏற்படுத்தாமல் அச்சப்படாத சீனா, சொந்த இறையாண்மையையும் கடல் சார் உரிமை நலன்களையும் உறுதியுடன் பேணிக்காக்கும்.