© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில ஆளுநர் கவின் நியூசம் தற்போது சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 25ஆம் நாள் அவரைச் சந்தித்துப் பேசினார். இவ்வாண்டின் ஜுன் மாதம் தொடங்கி சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்காவின் கேட்ஸ் நிதியத்தின் இணைத் தலைவர் பில் கேட்ஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிசிங்கர் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்தார். சீன மற்றும் அமரிக்காவின் பல்வேறு துறைகளிலான பரிமாற்றம் மற்றும் துணை தேசிய நிலை ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல பாடுபட்டு வரும் ஷிச்சின்பிங், சீன-அமெரிக்க உறவின் அடிப்படை, நாட்டுப்புறத்தில் அமைந்துள்ளதையும், அதன் நம்பிக்கை மக்களிடையேயும், இருதரப்புறவின் எதிர்காலம் இளைஞர்களிடையேயும் இருப்பதை பலமுறை வலியுறுத்தினார்.
கவின் நியூசம் சீனாவில் பயணம் மேற்கொண்டு கொண்டிருக்கும் அதேவேளையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் அழைப்பை ஏற்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 26ஆம் நாள் அமெரிக்கப் பயணத்தைத் தொடங்கினார். இவ்வாண்டு ஜுன் திங்கள் முதல், அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரிகள் பலர் சீனாவில் பயணம் செய்ததற்குப் பிறகு, சீனாவின் உயர்நிலை அதிகாரி முதல்முறையாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சீன-அமெரிக்க உறவை இயல்பு நிலைக்கு திருப்புவது குறித்து வெளிப்புறத்தில் இருந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சீன மற்றும் அமெரிக்கப் பொருளாதார மதிப்பு, உலகளவில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாகும். அதேபோன்று மக்கள் தொகையும் கிட்டத்தட்ட உலகின் நான்கில் ஒரு பகுதியை வகிக்கிறது. இரு தரப்பு வர்த்தகத் தொகை உலளவில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளது. இந்த சாதனைகள் மதித்துப் போற்றத்தக்கவை. கலிபோர்னியா மாநிலம் நீண்டகாலமாக சீனாவுடன் நட்புறவை நிலைநிறுத்தி வருகிறது. கருத்தியலைத் தாண்டி, பகுத்தறிவு மற்றும் திறந்த மனதுடன் ஒத்துழைப்பை முன்னெடுப்பதே அதற்கான காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.