சீன-அமெரிக்க உறவில் ஆக்கப்பூர்வமான சமிக்கை
2023-10-30 10:43:17

அமெரிக்காவின் அழைப்பை ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ அக்டோபர் 26 முதல் 28ஆம் நாள் வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது, அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் வாங்யீ சந்திப்பு நடத்தினார்.

இரு நாட்டுத் தலைவர்களும் சான் பிரான்சிஸ்கோ பயணத்துக்கு கூட்டாக முயற்சிகளை மேற்கொள்ள இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இது பல்வேறு துறையினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த கட்டமாக சீன-அமெரிக்க உறவின் மீது நம்பிக்கை ஆர்வம் கொள்வதற்கு இது காரணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பயணத்தில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளைப் பின்பற்றுவது, இரு தரப்புறவை நிதானப்படுத்துவது, தடையின்றி பரிமாற்றத்தை மேற்கொள்வது, கருத்து வேற்றுமை மற்றும் முரண்பாடுகளைக் கட்டுப்படுத்துவது, ஒன்றுக்கொன்று நன்மை புரியும் வழிமுறையில் ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது ஆகிய 5 கோரிக்கைகளைச் சீனா தெளிவாக முன்வைத்துள்ளது. இந்நிலையில், இரு நாட்டுறவைச் சீராகவும் தொடரவல்ல முறையிலும் வளர்க்க விரும்புவதாக அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.

உலகின் மிக முக்கியமான இரு தரப்பு உறவான சீன-அமெரிக்க உறவு, மனித குலத்தின் எதிர்காலம் மற்றும் தலைவிதியுடன் தொடர்புடையது. இரு நாட்டுறவு பற்றிய சீனாவின் சரியான கருத்து, சீன-அமெரிக்க உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான ஒரு முக்கிய காரணியாகும். அமெரிக்கா சீனாவுடன் இணைந்து, ஒரு திசையை நோக்கிப் பயணித்து, இரு நாட்டுறவு கூடிய விரைவில் இயல்பான நிலைக்கு வருவதை முன்னேற்ற வேண்டும்.