© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அக்டோபர் 31ஆம் நாள் பல பொருளாதாரத் தரவுகளின் படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில் சீனப் பொருளாதாரத் துறையில் நிலைப்புதன்மை மற்றும் சீரான வளர்ச்சிப் போக்கு காணப்பட்டுள்ளது.
சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேலான ஆண்டு வருமானமுடைய பண்பாட்டு மற்றும் தொடர்புடைய தொழில் நிறுவனங்களின் வருமானம் 9இலட்சத்து 16 ஆயிரத்து 190 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.7விழுக்காடு அதிகமாகும்.
இதனிடையே, சீனாவின் இணையத் துறையின் வருமானம் 1இலட்சத்து 2940 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.4விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மேலும், சீனத் தேசிய எரியாற்றல் நிர்வாகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில் எரியாற்றல் விநியோகம் மற்றும் தேவை பொதுவாக நிலையானது. எரியாற்றலுக்கான மூதலீடு வேகமான அதிகரிப்புப் போக்கை நிலைநிறுத்தியுள்ளது.