© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மோதல் தொடர்ந்து பரவினால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் என்று உலக வங்கி 30ஆம் நாள் எச்சரித்துள்ளது. மிகவும் கடுமையான சூழ்நிலையில், சர்வதேச எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 160 அமெரிக்க டாலரை எட்டுவதற்கு சாத்தியம் உள்ளது. வரலாற்றில் இல்லாத அளவில் புதிய உச்சம் அடையும் அதேவேளையில் உணவுப் பொருட்களின் விலையும் மேலும் உயரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் அக்டோபரில் மூண்டது முதல் இது வரை, சர்வதேச கச்சா எண்ணெய் விலை சுமார் 6 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்த மோதல் பரவாமல் இருந்தால், எண்ணெய் விலை பாதிப்பு குறுப்பிட்ட அளவுக்குள் இருக்கும். இல்லாவிடில், அதன் தாக்கம் பெரியதாக இருக்கும் என்று உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால், உணவுப் பொருட்களின் விலையும் உயரும். உக்ரைன் நெருக்கடியால், பல வளரும் நாடுகளிலே உணவு விலை உயர்ந்துள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மோதல் தீவிரமாகினால், உணவுப் பொருட்களின் விலை கூடுதலாக உயரும் என்றும் உலக வங்கியின் அதிகாரி ஒருவர் எச்சரித்தார்.