பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை மோசமாகாமல் தவிர்க்க வேண்டும்:சீனா
2023-10-31 16:57:30

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வான் வென்பிங் அக்டோபர் 31ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ஒவ்வொரு நாட்டுக்கும் தற்காப்பு உரிமை உண்டு. ஆனால் சர்வதேசச் சட்டம் குறிப்பாக, சர்வதேச மனித நேய சட்டத்தைப் பின்பற்றி, அப்பாவி மக்களைப் பாதுகாக்க வேண்டும். தற்போது ஐ.நா பொது பேரவையின் போர் நிறுத்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசரமானது. போரை நிறுத்தி, நிலைமை மோசமாகாமல் தவிர்த்து, மேலதிக மனித நேய பேரிடரைத் தடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ச்சாங் ஜுன் 30ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையில் உரைநிகழ்த்துகையில், மோதலுக்குள்ளான இரு தரப்புகளிடையில் நிலையான போர் நிறுத்தம் குறித்து, கடந்த வாரம் பெரும்பான்மை ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம், சர்வதேச சமூகத்தின் பொதுவான விருப்பத்தைக் காட்டுகிறது என்றார்.