இஸ்ரேலில் இருந்து தூதரைத் திரும்ப அழைப்பதாக கொலம்பியா மற்றும் சிலி அறிவிப்பு
2023-11-01 17:29:51

இஸ்ரேலிலிருந்து கொலம்பியத் தூதரைத் திரும்ப அழைப்பதாகவும், இஸ்ரேல், காசா பிரதேசத்தில் தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் கொலம்பிய அரசுத் தலைவர் பெட்ரோ அக்டோபர் 31ம் நாள் வலியுறுத்தியுள்ளார்.

கொலம்பிய வெளியுறவு அமைச்சகம் அன்று வெளியிட்ட அறிக்கையில், காசா பிரதேசத்திலுள்ள அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்ததோடு, இஸ்ரேல், சர்வதேச மனித நேய சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதே நாள், சிலி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல், காசா பிரதேசத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் சர்வதேச மனித நேயச் சட்டத்தை மீறிய செயல்களை மேற்கொண்டதால், இஸ்ரேலுக்கான சிலி தூதரைத் திரும்ப அழைக்க சிலி அரசு முடிவெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.