அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு மனநிறைவு தரும் சீன வணிகச் சூழல்
2023-11-01 14:07:57

சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில் வெளியிட்ட ஓர் ஆய்வு அறிக்கையின்படி, 80 விழுக்காட்டுக்கு மேலான அந்நிய முதலீட்டு தொழில் நிறுவனங்கள் சீனாவின் வணிகச் சூழல் பற்றி மனநிறைவு என்ற நிலைக்கு மேலான மதிப்பீடு செய்துள்ளன. மேலும், தொழில் நுட்பப் புத்தாக்கம், ஆய்வு மற்றும் மேம்பாடானது, சீனச் சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பாகும் என்றும் கருத்து கணிப்பில் பங்கேற்ற நிறுவனங்கள் தொடர்ந்து 3 காலாண்டுகளாகக் கருத்து தெரிவித்துள்ளன.

சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில் இவ்வாண்டின் 3ஆவது காலாண்டில் 700 அந்நிய முதலீட்டு தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு இவ்வறிக்கையை உருவாக்கியுள்ளது என்று அக்டோபர் 31ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.