சீனாவின் 40வது தென்துருவ ஆய்வுப் பயணம் துவக்கம்
2023-11-01 11:18:26

சீனாவின் 40வது தென்துருவ ஆய்வுப் பயணத்தின் துவக்க நிகழ்ச்சி நவம்பர் முதல் நாள் ஷாங்காயில் நடைபெற்றது. சீனாவின் 80க்கும் மேலான நிறுவனங்களைச் சேர்ந்த 460க்கும் மேலானோரை அடங்கிய ஆய்வுக் குழு, நவம்பர் முதல் நாள் சீனாவிலிருந்து புறப்பட்டு, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் திரும்பும்.

புதிய அறிவியல் ஆய்வு நிலையத்தின் கட்டுமானம், தென்துருவ உயிரினச் சூழல் அமைப்புக்கான காலநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றிய பரிசோதனை, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இத்தாலி, தென் கொரியா, ரஷியா, சிலி உள்ளிட்ட நாடுகளுடனான சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை, நடப்புப் பயணத்தின்போது மேற்கொள்ளப்படும் முக்கியமான 3 பணிகளாகும்.