இஸ்ரேலுடனான தூதாண்மை உறவு துண்டிப்பு:போலிவியா
2023-11-01 14:22:27

காசா பகுதியில் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் செய்த குற்றங்களைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலுடனான தூதாண்மை உறவை போலிவியா துண்டிக்க முடிவு செய்ததாக போலிவிய அரசு அக்டோபர் 31ஆம் நாள் அறிவித்தது. இதனிடையே, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித நேய உதவிகளை வழங்க போலிவியா அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் மந்திரி பிராடா அறிவித்தார்.

மேலும், இஸ்ரேலுக்கான கொலம்பிய தூதரை திரும்ப அழைத்ததாக கொலம்பிய அரசுத் தலைவர் குஸ்டாவோ பெட்ரோவ் அக்டோபர் 31ஆம் நாள் அறிவித்தார். அதோடு, "காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் படுகொலையை" நிறுத்துமாறு அவர் இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தவிரவும், இஸ்ரேலுக்கான சிலி தூதரை திரும்ப அழைத்ததாக சிலி அரசுத் தலைவர் அக்டோபர் 31ஆம் நாள் அறிவித்தோடு, காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச மனித நேய சட்டத்தை மீறியுள்ளதாகவும் வன்மையாகக் கண்டித்தார்.