செயற்கை நுண்ணறிவு மேலாண்மை பற்றி சீனா முன்மொழிவு
2023-11-01 19:44:14

சீன அறிவியல் தொழில் நுட்பத் துறையின் துணை அமைச்சரின் தலைமையிலான பிரதிநிதிக் குழு, நவம்பர் முதலாம் நாள் முதல் 2ம் நாள் வரை பிரிட்டனின் பலெச்லே பூங்காவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சிமாநாட்டில் பங்கெடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், விரைவாக வளர்ந்து வரும் நிலையில், வாய்ப்புகளும் சவால்களும் நிலவுகின்றன. சீனா, உலகின் செயற்கை நுண்ணறிவு மேலாண்மை பற்றிய முன்மொழிவை வழங்கவுள்ளதாக அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, பாதுகாப்பு, மேலாண்மை ஆகிய 3 அம்சங்கள் குறித்து, இம்முன்மொழிவு சீனாவின் தீர்வு திட்டங்களை விளக்கிக் கூறும். வளரும் நாடுகளில் ஒன்றான சீனா, இவ்வுச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு தரப்புகளுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பரந்த ஒத்த கருத்துகளைக் கொண்ட மேலாண்மை கட்டுக்கோப்பை உருவாக்குவதற்கு முன்மொழிவுகளை வழங்க விரும்புகிறது.