© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
10வது பெய்ஜிங் சியாங்ஷான் மன்றக்கூட்டம் அக்டோபர் 31ஆம் நாள் நிறைவு பெற்றது. 100க்கும் மேலான நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 1800க்கும் மேலான பிரதிநிதிகள், “கூட்டுப் பாதுகாப்பு மற்றும் நிரந்தர அமைதி” என்ற கருப்பொருளில் பேச்சுவார்த்தை மற்றும் பரிமாற்றத்தை மேற்கொண்டனர். பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் நிலையும் புதிய உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நெருக்கடி மற்றும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்ற பின்னணியில், பாதுகாப்பு விவகாரத்தை கூட்டாக விவாதித்து, தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கான பொது விருப்பம் இக்கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக தூதாண்மை முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் மற்றும் பரிமாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
சீனா முன்வைத்த உலகப் பாதுகாப்பு முன்மொழிவு, உலகப் பாதுகாப்பு மேலாண்மைக்கான முக்கிய தீர்வாக விளங்கியுள்ளது. 100க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஆதரவை இது பெற்றுள்ளது.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காப்பதில் பெரிய நாடுகள் முக்கிய பொறுப்பேற்றுள்ளன என்பது ஐயமில்லை. இரு நாட்டு இராணுவ உறவின் சீரான வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்க, அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மேலதிக வளரும் நாடுகள் கருத்து வெளிப்பாட்டுரிமையைப் பெறச் செய்வது, இக்கூட்டத்தின் தனிச்சிறப்பாகும். கூட்டுப் பாதுகாப்பை நனவாக்கும் வகையில், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம், நாடுகளுக்கிடையிலான கருத்து வேற்றுமைகள் மற்றும் சர்ச்சைகளை அமைதி முறையில் தீர்க்க வேண்டும்.
பாதுகாப்பானது, வளர்ச்சியின் முன்நிபந்தனையாகும். மனித குலம், பிரிக்கப்பட முடியாத பாதுகாப்பு சமூகமாகும். தற்போதைய சிக்கலான சர்வதேச சூழ்நிலையில் இந்தக் கருத்து மேலும் தெளிவாக உணர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.