ஃபுகுஷிமா அணு உலையில் புதிய விபத்து:நீண்டகால சர்வதேசக் கண்காணிப்பு தேவை
2023-11-02 20:07:24

அக்டோபர் 25ஆம் நாள், ஜப்பானின் ஃபுகுஷிமா முதலாவது அணு உலையில் கதிரியக்கத் திரவம் தெறித்ததாக தகவல் வெளியாகியது. இப்புதிய விபத்து, பரந்தளவில் கவனம் ஈர்த்துள்ளது. உண்மையில் இவ்விபத்தில் தெறித்த திரவ அளவு, தொடக்கத்தில் வெளியிட்ட 100 மிலிலிட்டரை விட, பல பத்து மடங்கு அதிகமாக இருந்தது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், டோக்கியோ மின்னாற்றல் நிறுவனத்தில், ஒழுங்கற்ற மேலாண்மை, பொது மக்களை ஏமாற்றுவது முதலிய பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலவுகின்றன. இந்நிலையில், ஜப்பான் அரசு முன்பு அறிவித்துள்ள பாதுகாப்பு மற்றும் வெளிப்படை தன்மை வாய்ந்த அணு கழிவு நீரைக் கடலில் வெளியேற்றும் திட்டத்தை நம்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீண்டகால மற்றும் பயனுள்ள சர்வதேசக் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை, இச்சம்பவம் மீண்டும் காட்டியது. ஜப்பான் அரசு, சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குப் பதிலளித்து, பொறுப்புடைய முறையில் கதிரியக்க நீரைக் கையாள வேண்டும். அதே வேளையில், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம், ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றி, ஜப்பானைக் கண்காணிக்கும் பொறுப்பு ஏற்று, கதிரியக்க நீரின் வெளியேற்றம், கடல் சுற்றுச்சூழல் மற்றும் மனித குலத்தின் ஆரோக்கியத்துக்கு நீண்டகால தீங்கு விளைவிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் வாங் வென்பின் தெரிவித்தார்.

படம்:VCG