ஆசிய-பசிபிக் பிரதேச பொருளாதார வளர்ச்சி 4.6 விழுக்காடு: சர்வதேச நாணய நிதியம்
2023-11-02 18:50:36

2023ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் முழு ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 4.6 விழுக்காட்டை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் இதன் பங்களிப்பு கிட்டத்தட்ட மூன்றில் 2 பகுதி வகிக்கிறது என்று சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்ட ஆசிய-பசிபிக் பொருளாதார வளர்ச்சி எதிர்காலம் என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிய-பசிபிக் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு 64.2விழுக்காடாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 2ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டு முதல், சீனப் பொருளாதாரம் தொடர்ச்சியாக சீராகி வருகிறது. இது, பிராந்தியம், மற்றும் உலகப் பொருளாதார மீட்சிக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்துகிறது. பலதரப்புவாதம் மற்றும் திறந்த நிலையிலான பிராந்திய கொள்கையைப் பின்பிற்றி, பொது நலன் தரும் விதமாக பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட ஆசிய-பசிபிக் சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக, சீனா பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்று குறிப்பிட்டார்.