சீனாவின் அடிப்படை பொது சுகாதார சேவை மேம்பாடு
2023-11-02 14:53:31

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகத்தின் செய்தியாளர் கூட்டம் நவம்பர் முதல் நாள் நடைபெற்றது. இதில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய லட்சியத்தின் உயர் தரமுள்ள வளர்ச்சியை மேம்படுத்தி மக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பது தொடர்பான தகவல்களை சீனத் தேசிய சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய ஆணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் அறிமுகப்படுத்தினர். இவ்வாண்டு முதல், சுகாதாரமான சீனா எனும் நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து விரைவுபடுத்தி வருகிறது. 49 தேசிய மண்டலங்களில் மருத்துவச் சிகிச்சை மையங்களின் கட்டுமானத் திட்டப்பணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 81 நகரப்புற மருத்துவச் சிகிச்சை குழுக்களின் கட்டுமானத் திட்டப்பணிகளும் தொடங்கியுள்ளன. முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரச் சேவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.