5ஆவது சீன-அமெரிக்க நட்புறவு நகர கூட்டத்துக்கு செய்தி அனுப்பிய ஷி ச்சின்பிங்
2023-11-03 19:32:53

5ஆவது சீன-அமெரிக்க நட்புறவு நகர கூட்டத்துக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 3ஆம் நாள் செய்தி ஒன்றை அனுப்பினார்.

இதில் அவர் கூறுகையில்,

பொது மக்களுக்கிடையிலான நட்புறவு இரு நாட்டுறவின் அடிப்படையாகும். நட்புறவு நகரங்கள், இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்புறவை ஆழமாக்கி, ஒன்றுக்கு ஒன்று வெற்றி பெறும் முக்கிய வழிமுறையாகும் என்றார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலதரப்பினர்களும், சீன-அமெரிக்க தொடர்பின் பாலமாகப் பணியாற்றி, இரு நாட்டுறவை முன்னேற்றுவதற்கும் இரு நாட்டு பொது மக்களின் நலனை அதிகரிப்பதற்கும் பங்காற்ற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

இக்கூட்டம் சீனாவின் ஜியாங் சூ மாநிலத்தின் சு ச்சோ நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.