ஹாங்காங் மீது அமெரிக்காவின் தடைக்கு சீனா எதிர்ப்பு
2023-11-03 17:12:47

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அண்மையில் சீனாவின் ஹாங்காங் மீது தடை மசோதாவை முன்வைத்து, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சில பத்து அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் மீது தடை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரியுள்ளனர். இதற்கு ஹாங்காங்கிற்கான சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மனநிறைவின்மை மற்றும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், சரியான பாதைக்கு ஹாங்காங் திரும்பிய உண்மை மற்றும் சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடுகளைப் புறக்கணித்து, நியாயமற்ற முறையில் ஒருசார்பு தடை நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர், முயல்கின்றனர். கோடு இல்லாத மேலாதிக்கச் செயலையும், ஹாங்காங்கைக் குழப்பமாக்கும் நோக்கத்தையும், இவர்களின் செயல் காட்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஒரே நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கையின் செயலாக்கம் மற்றும் ஹாங்காங்கின் செழுமை போக்கு மாறாது. அவை, எந்த தடை நடவடிக்கையால் தடுக்க முடியாதவை. அமெரிக்க அரசியல்வாதிகள், உண்மையைத் தெரிந்து கொண்டு, ஹாங்காங் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தி, தவறான பாதையில் நடைபோட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.