சீன-ஜோர்டான் வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு
2023-11-03 10:40:50

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, நவம்பர் 2ஆம் நாள், ஜோர்டான் துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான அய்மான் சஃபாடியினைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.  

அப்போது, காசா பிரதேசத்திலுள்ள அகதி முகாம் மீதான தாக்குதலைச் சீனா வன்முறையாகக் கண்டித்துள்ளது என்று வாங்யீ தெரிவித்தார்.

மேலும், பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தையை நீண்டகாலமாக முன்னேற்றுவதற்கும், அரபு நாடுகளின் சார்பில்,  பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் பற்றிய வரைவுத் தீர்மானத்தை ஐ.நா பேரவையில் ஜோர்டான் வழங்கியதற்குச் சீனத் தரப்பு பாராட்டு தெரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  

பாலஸ்தீன விவகாரத்தில் சீனாவின் நியாயம் மற்றும் நீதியான பக்கத்தில் நிற்பதற்கு நன்றி தெரிவித்த அய்மான் சஃபாடி, சீனத் தரப்புடன் இணைந்து ‘இரு நாடுகள்’ திட்டத்தைக் கூட்டாக முன்னேற்றி, பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாக பேணிக்காக விரும்புவதாகவும் கூறினார்.