துவங்கவுள்ள 6ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி
2023-11-03 19:46:25

கடந்த 6 ஆண்டுகளில் சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் நாங்கள் தொடர்ந்து பங்காற்றியுள்ளோம். இப்பொருட்காட்சியின் பழைய நண்பராக நாங்கள் இருக்கிறோம். இப்பொருட்காட்சியில் மேலதிகமான வாய்ப்புகளை பெற நம்புகிறோம் என்று சிங்கபூர் ஆசிய பங்குகளைக் கட்டுப்படுத்தும் டோலெ தொழில் நிறுவனத்தின் யாங்ச்சேயு பேட்டியளித்த போது தெரிவித்தார்.

6ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை சீனாவின் ஷாங்ஹாய் மாநகரில் நடைபெறவுள்ளது. அப்போது, உலகின் 154 நாடுகளையும் பிரதேசங்களையும் சர்வதேச நிறுவனங்களையும் சேர்ந்த விருந்தினர்கள் இதில் கலந்துகொள்வர். 3400க்கு மேலான தொழில் நிறுவனங்களும் இதில் பங்கேற்றும். இவற்றில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியில் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1500யை தாண்டியுள்ளது.

இவ்வாண்டு முதல் மூன்று காலாண்டில், சீனாவின் உள் நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரித்த விகிதம், 5.2 விழுக்காடாகும். உலகின் முக்கிய பொருளாதார நாடுகளை விட இது அதிகமாகும் என்று அன்னிய தொழில் நிறுவனங்கள் உணர்ந்துள்ளன.

140 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய சந்தையைத் தவிர்த்து, சீன அரசு மேற்கொண்ட திறப்பு கொள்கை அன்னிய தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் முக்கிய காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.