ஐ.நா அடைக்கல முகாமில் 7 இலட்சம் அகதிகள் குவிப்பு
2023-11-03 19:17:27

அக்டோபர் 7ம் நாள் பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதல் மூண்ட பின், காசா பிரதேசத்தில் ஐ.நாவைச் சேர்ந்த சுமார் 50 கட்டிடங்கள் மற்றும் சொத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில கட்டிடங்கள் நேரடியாகத் தாக்கப்பட்டன. தற்போது ஐ.நாவின் கிழக்கு பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணப் பணித்திட்ட அலுவலகம், காசா பிரதேசத்தில் அமைத்த அடைக்கல முகாமில் சுமார் 7 இலட்சம் பேர் தங்குகின்றனர் என்று நவம்பர் 3ம் நாள் இந்த அலுவலகம் தெரிவித்தது.

தற்போது காசா பிரதேசத்திலுள்ள ஐ.நா கட்டிடங்களில் இருப்பவர்கள், இதர பகுதிகளில் இருந்ததை விட, மேலும் பாதுகாப்பாகக் கிடையாது என்று இந்த அலுவலகத்தின் தலைமை செயலாளர் பேட்டியளித்தார்.