6ஆவது சிஐஐஇயில் பல வெளிநாட்டுத் தலைமை அமைச்சர்கள் பங்கேற்பு
2023-11-04 17:41:05

6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காயில் நடைபெற உள்ளது. சீனத் தலைமை அமைச்சர் லீ சியாங்கின் அழைப்பை ஏற்று, ஆஸ்திரேலியா, கியூபா, கசகஸ்தான், செர்பியா உள்ளிட்ட நாடுகளின் தலைமை அமைச்சர்கள் இப்பொருட்காட்சியின் துவக்க விழாவிலும் தொடர்புடைய நிகழ்வுகளிலும் பங்கெடுக்க உள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நவம்பர் 3ஆம் நாள் தெரிவித்தார்.