© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனா சொந்தமாகத் தயாரித்த முதல் பெரிய ரக சொகுசு கப்பலான “Adora Magic City” நவம்பர் 4ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. திட்டப்படி 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் வணிக ரீதியில் மேற்கொள்ளப்படும் அதன் முதல் பயணத்துக்கான ஆயத்தப்பணி துவங்கியுள்ளது.
1.355 லட்சம் டன் மொத்த எடை, 323.6 மீட்டர் நீளம், 37.2 மீட்டர் அகலம், 72.2 மீட்டர் உயரம் ஆகியவை கொண்ட இந்தக் கப்பல் 2125 விருந்தினர் அறைகளுடன் 5246 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது.
விமானந்தாங்கிக் கப்பல், பெரிய ரக திரவ இயற்கை வாயு போக்குவரத்து கப்பல், பெரிய ரக சொகுசு கப்பல் ஆகிய மூன்று வகை கப்பல்களைக் கட்டும் திறனைச் சீனா கொண்டுள்ளதாக சீனக் கப்பல் கட்டும் தொழில் சங்கத்தின் தலைமைச் செயலாளர் லீ யான்சிங் கூறினார்.