6ஆவது சிஐஐஇயின் ஊடக மையம் துவக்கம்
2023-11-04 19:57:43

6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காயில் நடைபெற உள்ளது. இப்பொருட்காட்சியின் ஊடக மையம் 4ஆம் நாள் முற்பகல் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. இம்மையம், 3200க்கும் மேலான சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்குச் சேவையை வழங்கவுள்ளது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் இணைந்துள்ள நாடுகளிலிருந்து சீனாவில் கல்வி பயிலும் மாணவர்கள் நடப்புப் பொருட்காட்சியில் தொண்டர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆங்கிலம் மற்றும் சீன மொழியைத் தவிர, போர்ச்சுகல், ஸ்பெனிஷ், பிரெஞ்சு, அரபு உள்ளிட்ட மொழிகளுடன் பல்வேறு நாடுகளின் செய்தியாளர்களுக்கு அவர்கள் சேவையை வழங்கவுள்ளனர்.