134ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி நிறைவு
2023-11-04 19:59:01

134ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி நவம்பர் 4ஆம் நாள் குவாங்சோ நகரில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

15.5 லட்சம் சதுர மீட்டர் மொத்த பரப்பளவு, 74 ஆயிரம் காட்சியிரங்கள், 28 ஆயிரம் பங்கேற்ற தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் நடப்புப் பொருட்காட்சியின் அளவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பொருட்காட்சி நடைபெற்ற 15 நாட்களில் வருகை தந்த 1.98 லட்சம் வெளிநாட்டு கொள்வனவு வணிகர்கள் எண்ணிக்கை, கடந்த முறையை விட 50 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது. அவர்களில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கூட்டாளி நாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 63.9 விழுக்காடு. இது கடந்த முறையை விட 68.6 விழுக்காடு அதிகரித்தது. மேலும் நடப்புப் பொருட்காட்சியில் இணையம் சாரா முறையில் எட்டப்பட்ட ஏற்றுமதித் தொகை 2230 கோடி அமெரிக்க டாலரை எட்டி, முன்பை விட 2.8 விழுக்காடு அதிகரித்து, வளர்ச்சிப் போக்கைக் காட்டியுள்ளது.

135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் மே 5ஆம் நாள் வரை நடைபெற உள்ளது.