சீன ஊடகக் குழுமத்துக்கு கென்யாவின் அரசுத் தலைவர் அளித்த பேட்டி
2023-11-04 17:19:45

கென்யா, கிழக்கு ஆப்பிரிக்காவில் சீனாவின் முதல் பெரிய வர்த்தக கூட்டாளி நாடாகும். சர்வதேச ஒத்துழைப்புக்கான 3ஆவது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தில் கென்யாவின் அரசுத் தலைவர் வில்லியம் ரூட்டோ பங்கெடுத்தார். சீன ஊடகக் குழுமத்துக்கு அவர் அளித்த பேட்டியில், பேச்சுவார்த்தை நடத்தி, தத்தமது வளர்ச்சி அனுபவங்களைப் பகிர்வது, இதுவரை பெறப்பட்டுள்ள சாதனைகளின் அடிப்படையில் மேலும் நல்ல உலகத்தின் உருவாக்கம் பற்றி விவாதம் நடத்துவது, அரசு சாரா தொழில் நிறுவனங்களுடன் பரிமாற்றம் மேற்கொள்வது ஆகியவை, நடப்பு மன்றக்கூட்டத்தின் 3 முக்கியத்துவங்களாகும் என்றார்.

மேலும், சீனாவின் வளர்ச்சி வழிமுறையிலிருந்து கென்யா அதிகமான அனுபவங்களைக் கற்றுக்கொண்டுள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, உலக வளர்ச்சி முன்மொழிவு, உலகப் பாதுகாப்பு முன்மொழிவு ஆகியவை, பல்வேறு துறைகளில் உலக முன்னேற்றத்துக்குப் பங்காற்றியுள்ளன. சீனா பெற்றுள்ள சிறந்த வளர்ச்சிக்கு கென்யா பாராட்டு தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார்.